1. 'தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்' என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
2. குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
3. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
4. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
5. 'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
6. 'அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி' - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
7. 'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஓரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
8. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
9. 'தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு' என்று கூறியவர்
10. மன்னிப்பு - எம்மொழிச் சொல்